10வது தடவையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதியீட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்

0
49
Article Top Ad

 

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற முதலாவது ஐபிஎல் தகுதிகாண் பிளேஓவ் போட்டியில் 15 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது தடவையாக ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இம்முறை ஐபிஎல் முதற்சுற்றுப்போட்டிகளில் விளையாடிய 14ல் 9 வெற்றிகளையீட்டி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த கடந்தாண்டு சம்பியன் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகளைப் பெற்றிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதலாவது தகுதிகாண் போட்டி செவ்வாயன்று நடைபெற்றது.

இதற்கு முன் இரு அணிகளும் சந்தித்த 3 போட்டிகளிலும் வெற்றியீட்டியிருந்த குஜராத் அணி பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கியது. அதன்படி நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய குஜராத் அணி சென்னை அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

முதலில் துடுப்பெடித்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அதிகப்படியாக டுட்ராஜ் கெய்க்வாட் 60 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமேபெற்று 15 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது.

இந்த வெற்றியை அடுத்து எதிர்வரும் மே 28ம்திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதிபெற்றுள்ளது.