மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகிய குஜராத் டைடான்ஸ்

0
121
Article Top Ad

ஆறாவது தடவையாக ஐபிஎல் கிண்ணத்தை வெல்லும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கனவை குஜராத் அணி சிதறடித்தது. இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியது .

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹிட் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை குஜராத் டைடான்ஸ் அணிக்கு வழங்கினார்.

சுப்மன் கில்லின் அட்டகாசமான 129 ஓட்டங்களுடன் துணையுடன் மொத்தமாக 233 ஓட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குவித்தது குஜராத் டைடான்ஸ் அணி.

60 பந்துகளை மாத்திரமே எதிர்கொண்ட கில் 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 129 ஓட்டங்களைப் பெற்றார்.

இது நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் பெற்ற மூன்றாவது சதமாக அமைந்தது. இத்துடன் நடப்பு தொடரில் அவர் குவித்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கை 850ஐக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலடித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்கள் 2 பந்துகளில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெற்றியை அடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள குஜராத் அணி தகுதியீட்டியமை குறிப்பிடத்தக்கது.