எலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் மூளையில் சிப்களைப் பொருத்தி அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது.
இந்த சோதனைகளுக்காக உடனடியாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. சோதனைகளைத் தொடங்குவது குறித்து மஸ்க்கின் முந்தைய பணிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகமே இது குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.எஃப்.டி.ஏ ஒப்புதலை பெறுவதற்கு நியூராலிங்கின் முந்தைய முயற்சி பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது என பல தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது