அஸ்வின் இல்லாமையை முதல் நாளிலேயே உணர்ந்த இந்தியா: அவுஸ்திரேலியாவிற்கு எதிராக திணறல்

0
89
Article Top Ad

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமான உலக டெஸ்ற் சம்பியன்ஸிப் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை டெஸ்ற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றதை அடுத்து களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களால் முதல் மூன்று விக்கட்டுக்களையும் 76 ஓட்டங்களுக்குள் சுருட்ட முடிந்தது. எனினும் 4வது விக்கட்டுக்காக ஸ்டிவன் ஸ்மித் (95 *) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (146*)பிரிக்கப்படாத 251 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அவுஸ்திரேலியாவை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளனர்.

இடதுகைத்துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசும் அஸ்வின் இடம்பெறாமை ஐந்து இடதுகைத் துடுப்பாட்டவீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு சாதகமாக மாறிவிட்டுள்ளது என கிரிக்கட் விற்பன்னர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 327 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.