கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

0
102
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சகொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.