பிரஞ்சுப் பகிரங்க டென்னிஸ் French Open மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா சுவான்டெக் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முகோவாவை எதிர்கொண்டார்.
BACK-TO-BACK 🏆🏆
Iga Swiatek defends her French Open title in a thrilling victory.
She is the youngest player to capture 4 Women's Singles Grand Slam titles since Serena Williams 🔥
(via @rolandgarros)pic.twitter.com/8jkIzB325S
— Yahoo Sports (@YahooSports) June 10, 2023
முதலாவது செட் 6ற்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனை சுவான்டெக் கைப்பற்றினார். இதனையடுத்து கடும் போட்டியைக் கொடுத்த முகோவா இரண்டாவது செட் ஐ 7ற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். அதனைத்தொடர்ந்து தீர்மானமிகு மூன்றாவது செட்டில் இருவரும் சளைக்காது மோதிக்கொண்ட போதும் தனது அனுபவத்தை ஒருங்கிணைத்து 6ற்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி சுவான்டெக் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
இது சுவான்டெக் வென்றெடுத்த மூன்றாவது பிரஞ்சு பகிரங்க சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னர் 2020ம் மற்றும் 2022ம் ஆண்டுகளில் அவர் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.