விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வென்று பிரஞ்சு பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை தனதாக்கிய இகா சுவான்டெக்

0
122
Article Top Ad

பிரஞ்சுப் பகிரங்க டென்னிஸ் French Open மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா சுவான்டெக் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முகோவாவை எதிர்கொண்டார்.

முதலாவது செட் 6ற்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனை சுவான்டெக் கைப்பற்றினார். இதனையடுத்து கடும் போட்டியைக் கொடுத்த முகோவா இரண்டாவது செட் ஐ 7ற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். அதனைத்தொடர்ந்து தீர்மானமிகு மூன்றாவது செட்டில் இருவரும் சளைக்காது மோதிக்கொண்ட போதும் தனது அனுபவத்தை ஒருங்கிணைத்து 6ற்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி சுவான்டெக் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

இது சுவான்டெக் வென்றெடுத்த மூன்றாவது பிரஞ்சு பகிரங்க சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னர் 2020ம் மற்றும் 2022ம் ஆண்டுகளில் அவர் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.