சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீது குற்றம் சுமத்தி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வதேச நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என குற்றம் சுமத்தி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பின்வரும் எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரம் வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

