இந்து மதத்தின் தெய்வீக உருவமும், இந்துகளின் போற்றுதலுக்குரியவருமான ஹனுமான், 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிகாரப்பூர்வ சின்னமாக அலங்கரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய தடகளப் போட்டி ஜூலை 12 முதல் 16 வரை பாங்காக்கில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. ஆசிய தடகள சங்கத்தின் 50வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆசியன் தடகள சங்கம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹனுமான் எவ்வாறு விசுவாசம் மற்றும் தைரியத்தின் உருவகமாக இருக்கிறார் என்பதைப் பற்றி எழுதியுள்ளது.
ஹனுமான் சின்னம், இந்த போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பல்வேறு அத்தியாவசிய பண்புகளை குறிப்பதாக ஆசியன் தடகள சங்கம் தெரிவித்துள்ளது.
வால்மீகி எழுதிய இந்திய காவியமான இராமாயணம் தாய்லாந்து உட்பட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதிப்பாக வெளியாகியுள்ளது. ராமாகியன் என்பது இந்திய புராணத்தின் தாய் பதிப்பு ஆகும்.
2021 ஆம் ஆண்டில் 24 வது சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 25 வது தடகளப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
தாய்லாந்தின் வேகமான ஓட்டப்பந்தய வீரரான பூரிபோல் பூன்சன், கவனிக்க வேண்டிய 18 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் போட்டிகளில் சிறந்த இளம் விளையாட்டு வீரர்களில் ஒருவர்.
இந்தோனேசிய ஓட்டப்பந்தய வீரர் லாலு முஹம்மது சோஹ்ரி மற்றும் ஜப்பானின் தூர ஓட்டப்பந்தய வீராங்கனை தனகா நோசோமி ஆகியோர் இந்த போட்டிகளில் கலந்துகொண்டுள்ள முக்கிய வீரர்கள் ஆவர்.