‘இலங்கைக்கான அடுத்தகட்ட கடன்திட்டம்’ – IMF குழுவின் உறுப்பினர் வெளியிட்ட கருத்து!

0
45
Article Top Ad

சர்வதேச நாயண நிதியத்தின் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு அடுத்தகட்ட கடன் திட்டங்களை வழங்குவதங்கான வலுவான ஆதரவுகள் கிடைக்கப்பெறுமென சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின்பிரதிநிதியும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் விவகாரங்களை கண்காணிப்பவருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்தார்.

குறைக்கப்பட்டுள்ள வட்டி வீதங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை அதன் 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் திட்டத்தின் அடுத்தகட்ட தவணைகளை பெற்றுக்கொள்ளும் வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமையை ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்தக் குழுவில் உள்ள 24 நிர்வாக இயக்குனர்களில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனும் ஒருவராவார்.

கடன் வழங்கல் முடிவுகளுக்கு இலங்கைக்கு வரவிருக்கும் குழுவின் ஒருமித்த கருத்து அவசியமாகும்.

சர்வதேச நாணய நிதியம் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கான தமது முதல் கடன் திட்டத்தை அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.