பொதுஜன பெரமுனவில் ரணிலுக்கு ஆதவாக புதிய குழு

0
76
Article Top Ad

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இந்த புதிய கூட்டணியை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதுடன், இராஜகிரிய பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்தக் குழுவில் சுமார் 40 எம்.பி.க்கள் உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல எம்.பி.க்களும் இதில் இணைய உள்ளதாகவும், தற்போது சுயாதீன உறுப்பினர்களாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணியில் இணைந்துக்கொள்ள உள்ளதாகவும் அறிய முடிகிறது