வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்

0
103
Article Top Ad

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, இன்றைய தினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த ஹர்த்தாலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசியர் சங்கம், தமிழரசுக்கட்சி, உள்ளிட்ட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.