சர்வதேசத்திடம் நீதி கோரி விண்ணதிரக் கோஷங்கள் – முல்லைத்தீவில் அலையெனத் திரண்ட மக்கள்

0
71
Article Top Ad

“சர்வதேசமே எமக்காகக் குரல் கொடு” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இந்தப் பேரணியை முன்னெடுத்தது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், புதைகுழி அகழ்வின்போது சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும், குருந்தூர்மலை உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் ஆரம்பமான பேரணி, நீதிமன்றம் முன்பாகச் சென்று முல்லைத்தீவு – மாங்குளம் வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

இந்தப் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மதகுருமார்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்துகொண்டு சர்வதேசத்திடம் நீதி கோரி விண்ணதிரக் கோஷமிட்டனர்.

இதேவேளை, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.