வந்த வேகத்திலேயே வீழ்ச்சிபாதைக்கு சென்ற Threads சமூக வலைத்தள செயலி

0
377
Article Top Ad

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய்நிறுவனமான Meta இம்மாதத் தொடக்கத்தில் என்ற சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியிருந்தது. டுவிட்டருக்குப் போட்டியாக இது திகழும் என்ற வகையில் ஆரம்ப நாட்களில் சேர்ந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை அமைந்தது. முதல் ஐந்து நாட்களிலேயே 100 மில்லியன்கள் என்ற அங்கத்துவ எண்ணிக்கையைப் பெற்றது Threads .

ஆனால் இந்த எண்ணிக்கை அரைவாசிக்கும் அதிகமாக குறைவடைந்துவிட்டதாக அமைப்பின் தலைவர் மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

100மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இணைந்துகொண்டால் அவ்வளவு பேரும் அதன் பயனர்களாக இருப்பது இலட்சியகரமான விடயம் அதில் அரைவாசியளவானவர்கள் பயன்படுத்தினாலே பெரிய விடயம் ஆனால் இன்னமும் நாம் அந்த இடத்தினை அடையவில்லை என்று மார்க் ஸக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

Threads செயலி அறிமுகப்பட்டபோது அதில் பயனர்களுக்கான அம்சங்கள், செயற்பாட்டு விடயங்கள் குறைவாக இருந்தமை புதிய பயனர்களைத் தக்கவைக்க முடியாமைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அண்மைய நாட்களில் “following”, “For You”  போன்ற அம்சங்களை Meta அறிமுகப்படுத்திய போதும் ஆரம்ப நாட்களில் ஆரவாரம் பெரிதும் மங்கிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.