ஆறு மாதங்களுக்குள் புதிய மருத்துவச் சட்டமூலத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

0
70
Article Top Ad

தற்போதைய மருத்துவ கட்டளை சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கையில் புதிய மருத்துவ சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய மருத்துவ சட்டமூலத்தை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய மருத்துவக் கட்டளைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தரமான சுகாதார சேவையை வழங்குதல் மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் 03 மாதங்களுக்குத் தேவையான அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 30 பில்லியன் ரூபாவை மேலதிகமாக மருத்துப் பொருட்களுக்காக ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.