தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – இலங்கை இறைமையுள்ள நாடு என்கிறார் பிரதமர்

0
151
Article Top Ad


அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்  மேலும் கூறியதாவது:-

“இலங்கை இறைமையுள்ள ஒரு நாடாகும். இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது.

உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமேதான் பேசித் தீர்க்க வேண்டும். வெளிநாடுகளை நாடுவதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

எனவே, அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது. எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதை உணர்ந்து தமிழ்த் தலைவர்கள் செயற்பட வேண்டும்.” – என்றார்.
……………..