இந்திய பெருங்கடலில் 6000 மீற்றர் ஆழ்கடலுக்குள் சமுத்ராயனை அனுப்புகிறது இந்தியா

0
44
Article Top Ad

இந்திய கடலியல் ஆய்வாளர்களின் ஊகத்தின்படி இந்திய பெருங்கடலில் 6000 அடி ஆழத்தில் புதைந்துக்கிடப்பதாக கருதப்படும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிமங்களை கடலுக்கு மேல் கொண்டுவரும் விசேடத் திட்டமொன்றை இந்தியா தயாரித்துள்ளது.

இதுகுறித்த ஆய்வுகளை நடத்த ‘சமுத்ராயன்“ என்ற சப்மெர்சியலை (sabmercial) இந்திய கடலியல் ஆய்வாளர்கள் உருவாக்கி வருவதுடன், 2026ஆம் ஆண்டில் இந்த சமுத்ராயன் கடலுக்குள் அனுப்படும் என்பதுடன் இதற்காக இந்தியா 4077 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. சமுத்ராயனை உருவாக்க மட்டும் 350 கோடி செலவிடப்படுகிறது.

விண்வெளிக்கும் இந்தியா சந்திராயனை அனுப்புவதுதான் எமக்கு தெரியும். கடந்த மாதம் சந்திராயன் 3 ஐ இந்தியா விண்ணில் செலுத்தியிருந்தது.

ஆனால், விண்வெளியை போலவே கடலுக்குள் உள்ள மர்மங்களையும் இந்தியா ஆய்வுசெய்து வருகிறது. இதுபற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் 3000 அடிக்கு கீழே உள்ள டைட்டினிக் கப்பலை பார்க்கச் சென்ற “டைட்டன்“ வெடித்தி சிதறியது முதல் கடல்சார் ஆய்வுகளிலும் கடல்சார் சுற்றுலாக்களிலும் பல வல்லரசு நாடுகள் ஈடுபட்டு வருவது தொடர்பிலான தகவல்கள் மனிதகுலத்தை சிந்திக்க வைத்தது.

பல மில்லியன் டொலர்கள் செலுத்தி இவ்வாறான சுற்றுலாக்கள் இடம்பெறுவதால் சாதாரண உலக மக்களுக்கு இந்த விடயங்கள் பற்றிய போதிய அறிவு இல்லை. “டைட்டன்“ காணாமல் போய் ஏற்பட்ட விபத்தின் பின்னர்தான் இவ்வாறான ஆழ்கடல் சுற்றுலாக்கள்கூட உள்ளன என்பதை அறிந்தோம்.

தென்சீனக் கடல், பசுபிக் கடல், மத்திய தரைகடல், இந்திய பெருங்கடல் முதல் அந்தாடிக்காவின் கடல்பரப்பில்கூட பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தாடிக்காவுக்கு ஆர்ஜனடினாவில் இருந்து கடல்சார் சுற்றுலாக்கூட உள்ளது.

கடல் ஆய்வுகள் விண்வெளி ஆய்வுகள் போன்று பிரபல்யம் இல்லாவிட்டாலும் உலகின் அத்தனை வல்லரசு நாடுகளும் கடல்சார் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய பெருங்கடலில் 6000 மீற்றர் அடிக்கு கீழ் சென்று ஆய்வை மேற்கொள்ளும் திட்டத்துக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளதுடன், இதற்கான “சமுத்ராயன்“ என்ற சப்மெர்சிபலை உருவாக்கி வருகிறது.

சமுத்ராயனில் மூன்று பேர் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல உள்ளதுடன் இத்திட்டத்திற்காக இந்தியா 4077 கோடியை செலவிட உள்ளது.

உலகில் எவரும் செல்லாத ஆழத்திற்கே இந்தியாவின் சமுத்ராயன் செல்லவுள்ளது. சமுத்ராயனை உருவாக்க மட்டும் 350 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

2026ஆம் ஆண்டில்தான் இந்த சமுத்ராயன் கடலுக்குள் செல்லவுள்ளது. 6000 மீற்றர் இவ்வாறு கடலுக்குள் செல்லவுள்ளது.

சமுத்ராயன் எதற்காக கடலுக்குள் அனுப்பப்படுகிறது என்பது சர்வதேச ரீதியில் பேசுபொருளாக உள்ளது.

இந்தியாவின் மொத்த கடலோர பகுதியானது 7517 கடல் மையில்களும். குஜராத் முதல் மேற்குவங்கம் சுமார் 9 மாநிலங்களுக்கு கடல்பகுதிகள் உள்ளன. இந்தியாவின் வசம் மொத்தம் 1382 தீவுகள் உள்ளன. இந்த கடல்சார் பொருளாதாரத்தில் நன்மை அடைவதே இந்தியாவின் நீண்டகால கனவும் எதிர்பார்ப்பும்.

பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் அறிய வகை உயிரினங்கள் இந்திய பெருங்கடலில்தான் உள்ளன. கடலுக்கு அடியில் பல பெறுமதியான கனிமங்களும் (minerals) உள்ளன. இதனை கடலுக்கு வெளியில் எடுக்க ஆரம்பித்தால் இந்தியா இவற்றை இறக்குமதி செய்யும் தேவை இருக்காது என்பதுடன், இந்தியாவின் பொருளாதார உலகின் மிகவும் பலம்வாய்ந்த பொருளாதாரமாகவும் மாறிவிடும் என இந்திய அரசாங்கம் எண்ணியுள்ளது.

ஆனால், விண்வெளியைவிட கடலுக்குள் செல்வது கடினமாகும். கடல் மிகவும் அழுத்தமான பகுதியாக இருப்பதாலும் அண்மையில் டைட்டன் ஆழ்காடலில் விபத்துக்கு உள்ளானதாலும் இந்த திட்டம் மிகவும் சவானானதாகதான் இந்தியாவுக்கு இருக்கும்.

2019ஆம் ஆண்டே “சமுத்ராயன் திட்டம்“ அறிமுகப்படுத்தப்பட்டது. நீல கடல் பொருளாதாரத் திட்டத்தின் பிரகாரம் இந்த திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

National institute of ocean technology தான் இந்த திட்டத்தை வழிநடத்துகிறது. தண்ணீரில் உள்ள விஷ்னுவின் அவதாரம்தான் சமுத்ராயன் என்பது. அந்த பெயரைதான் சப்மெர்சிபலுக்கு வைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஆழ்கடல் பகுதியில் 300 மீற்றர்வரை இந்த சப்மெர்சிபலை அனுப்பி பரிசோதித்தும் பார்த்துள்ளனர். இது வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக நேர்வேயில் உள்ள நிறுவனம் National institute of ocean technology க்கு சான்றிதழ் அளித்துள்ளது.

கடலுக்குள் 12 மணிநேரம் தாக்குப்பிடிக்கும் வகையில் சமுத்ராயன் உருவாக்கப்படுகிறது. இந்த சப்மெர்சிபல் காணாமல் போனால் 96 மணித்தியாலங்கள் அதில் உள்ளவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒட்சிசன் அதில் இருக்கும்.

புலோடிங் டிவைஸ் தொழில்நுட்பம் மூலம் சமுத்ராயன் இருக்கும் இடத்தையும் இலகுவாக கண்டிபிக்கும் வகையிலேயே உருவாக்கப்படுகிறது.

கடலின் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்ற நாடுகளாக அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஸ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள்தான் இதுவரை உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவும் இணைய வேண்டும் என்பதே அதன் திட்டமாகும்.

பயனுடைய கனிமங்கள் இருப்பதை இந்தியா கண்டறிந்தால் உலக வல்லரசாக இந்தியா உருவாகிவிடும் என கடலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(ஆக்கம் – சு.நிஷாந்தன்)