தமிழ் சினிமாவில் தற்போது காணப்படும் எழுதப்படாத 10 விதிகள் !

0
71
Article Top Ad

  1. ஒரு படம் திரைக்கு வர வேண்டும் என்றால் தயாரிப்பாளர் பெரிய ஆளாக இருக்க வேண்டும் அல்லது குறைந்து இரண்டு கோடி செலவில் எடுக்கப்பட்டதாய் இருக்க வேண்டும். ஐம்பது லட்சத்தில் ஒரு நல்ல படம் எடுத்தாலும் திரையிட முடியாது. யாராவது ஒரு பெரிய பிரபலம் வாங்கி வெளியிட்டால் தான் உண்டு (சில்லுக்கருப்பட்டி – 2D, பாரம்- வெற்றிமாறன்)
  2. பிரபலமான ஹீரோவிற்கு அறிமுக பாடல் இருக்க வேண்டும். பிரபலம் இல்லாத ஆட்கள் கூட தயாரிப்பாளரை நச்சரித்து பாடலை சேர்க்கின்றனர்.
  3. யோகி பாபு கண்டிப்பாக இருக்கனும். காலேஜ் பையன்னாலும் சரி, போலிஸானாலும் சரி யோகி பாபு தான்.
  4. ஹீரோயினை தழுவி எடுக்கப்படும் படங்களில் பிரபலம் இல்லாத ஹீரோ இல்ல கதாநாயகிக்கு ஆளே இருக்க கூடாது. (பொன்மகள் வந்தால், பெண்குயின், ஐரா, நாயகி, தம்பி)
  5. ஒரு படம் ஹிட்டடித்துவிட்டால் அடுத்த படத்திற்கு விண்ணை முட்டும் அளவிற்கு சம்பள உயர்வு. இதுவே படம் தோல்வி என்றால் சம்பளம் குறைப்பு இல்லை. போன படத்திற்கு வாங்கிய அதே சம்பளம்.
  6. சிறிய படம் முதல் வாரம் ஓடவில்லை என்றால் இரண்டாவது வாரம் திரையரங்கில் இருந்து தூக்கல். வாய் வழி செய்தி மூலம் படத்திற்கு நல்ல பெயர் கிடைத்து மக்கள் திரையரங்கள் நோக்கி வரும் போது சரியான காட்சி நேரங்கள் இருக்காது. இதுவே பெரிய ஹீரோ படங்கள் என்றால் ஓடுதோ இல்லையோ போட்ட காசை எடுக்க இரண்டாவது வாரம் கொடுப்பார்கள்.
  7. ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் மறுபடியும் அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கிடைப்பது மறு ஜென்மம் எடுப்பது போன்றது. (பைரவா- பரதன், ஜில்லா- நேசன், காலா- ரஞ்சித்)
  8. தமிழ் முக சாயல் கொண்ட மாநிறமாக இருக்கும் பெண் காதாநாயகியாக திரையில் வரவே முடியாது. திறமை, நடிப்பாற்றல் இருந்தும்.
  9. ஒரு காமெடி படம் ஹிட்டடித்து விட்டால் தொடர்ந்து இயக்குனரிடம் காமெடி கதையாகவே கேட்பது. இயக்குனரிடம் காமெடி கதை இல்லை என்றாலும். (முண்டாசுபட்டி- ராம்குமார், மரகத நாணயம்)
  10. திரைக்கதை எழுத வரவில்லை என்றாலும் இயக்குனரே திரைக்கதை எழுதுவது. மலையாளத்தில் அப்படி இல்லை. அய்யப்பனும் கோஷியும் திரைப்பட இயக்குனர் சச்சி பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக மட்டுமே பணிபுரிந்துள்ளார்.