ஹவாய் Maui காட்டுத்தீயில் இறந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு !

0
172
Article Top Ad

 

கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பரவலுக்கு முன்பிருந்த ஹவாயின் மாவித்தீவின் தோற்றமும் தற்போதைய தோற்றமும்

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹவாய் தீவுகளில் ஒன்றான Maui மவுயில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன் ‘ஹவாய் வரலாற்றிலேயே இது மிக மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது’ என்றார்.

மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார்.

 

தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அதிவிரைவாக போதுமான நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வகையில் தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் அவசர நிலையை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.

ஹவாய் தீவின் தலைநகராக இருந்த லஹைனா ஒரு கடற்கரை நகரம். வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா முக்கியத்துவம் மிக்க இடங்களுக்குப் பெயர்போன நகராக இது திகழ்கிறது. இதுபோன்ற பெரும்பாலான இடங்கள் பற்றி எரிந்த தீயின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் 122 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த பயனீர்ஸ் இன் என்ற விடுதியும் ஒன்று. இந்த விடுதி முழுமையாக தீயில் எரிந்துவிட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹவாய் (Hawai) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். இதில் ஒன்றுதான் மவுயி.ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது.