மகளிர் உலகக்கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் ,சுவீடன் அணிகள் !

0
56
Article Top Ad

 

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் கூட்டாக நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டப்போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் மற்றும் சுவீடன் அணிகள் தகுதிபெற்றுள்ளன.

முதலாவது காலிறுதியாட்டத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் 2ற்கு ஒன்று என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதிப்போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் மோதின. இதில் 2ற்கு 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சுவீடன் அணி அரையிறுதிக்கு தகுதியீட்டியது.

அவுஸ்திரேலிய நேரப்படி சனிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப்போட்டிகளில் முறையே பிரான்ஸ் அணி போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலிய அணியையும் இங்கிலாந்து அணி கொலம்பிய அணியையும் எதிர்கொள்ளவுள்ளன.