கனடாவில் உத்தியோகபூர்வமாக “உரிமைகோரப்படாத” 70 M (1660 கோடி ) லொத்தர் சீட்டு !

0
138
Article Top Ad
2020ம் ஆண்டில் லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றவர். 2022ல் வெற்றிபெற்றவர் இனங்காணப்படவில்லை

கனடாவில் பிரபலமான லொத்தர் சீட்டிழுப்புக்களில் Lotto Max ஒன்றாகும். கடந்த வருடம் நடைபெற்ற Lotto Max சீட்டிழுப்பின் போது ஸ்காபுரோ பகுதியில் அந்த லொத்தர் சீட்டைக் கொள்வனவு செய்த ஒருவரின் சீட்டுடன் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 28ம் திகதி வெற்றி எண்கள் பொருந்தியதால் 70M மில்லியன் கனேடிய டொலர்கள் வெற்றியாளர் ஒருவர் உள்ளதாக கூறப்பட்டது .இலங்கை நாணயத்தின் தற்போதைய மதிப்பில் இதன் பெறுமதி 1660 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும்.

ஆனால் கடந்த ஒருவருடகாலமாகியும் உண்மையான உரிமையாளரைக் கண்டறியமுடியாத நிலையில் “உரிமைகோரப்படாத” லொத்தர் வெற்றிச்சீட்டாக அது உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

8, 19, 22, 41, 42, 46, 47 போனஸ்  10 என்பனவே வெற்றி எண்களாகும். உத்தியோகபூர்வமாக உரிமைகோரக்கூடிய ஒருவருட கால எல்லையான ஜுன் 28 2023 வரையில் தாம் தான் உரிமையாளர்கள் எனக் கூறிய 2700ற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புக்களும் மின்னஞ்சல்களும் கிடைக்கப்பெற்றதாக சீட்டிழுப்பை நடத்தும் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் அவர்கள் தம்மிடம் தற்போது லொத்தர் சீட்டு இல்லை எனவும் அதனைத் தவறவிட்டுவிட்டதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.