IMF உடனான மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பரில் நடத்த திட்டம்

0
88
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வுக் கூட்டத்தினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்தக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தொடர்ந்து 8 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக்க அவர் குறிப்பிட்டுள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தின் பின்னர் இலங்கை, கோரப்பட்ட கடன் தொகையின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதில் இலங்கை உறுதியாக இருக்கின்றதா என்பதை சர்வதேச நாணய நிதியம் அவதானித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வாங்கி, நிதி அமைச்சு மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் இந்த மீளாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்துடன் 9 இணக்கப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக 2.9 பில்லியன் டொலருக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த நீதியானது 2027 ஆம் ஆண்டுவரை 8 தவணைகளில் பெறப்படுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.