சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம்

0
72
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தொடர்ந்து 8 நாட்களுக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னதாக தெரிவித்திருந்தார்.

குறித்த கூட்டத்தின் பின்னர் இலங்கை, கோரப்பட்ட கடன் தொகையின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

முதற்கட்டமாக 2.9 பில்லியன் டொலருக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த நீதியானது 2027 ஆம் ஆண்டுவரை 8 தவணைகளில் பெறப்படுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.