கனடா காட்டுத் தீ அகோரம்: யெல்லோநைஃப் (YELLOWKNIFE) நகரிலிருந்து 20 ஆயிரம் மக்களை வெளியேறுமாறு உத்தரவு!

0
76
Article Top Ad

 

கனடாவின் யெல்லோநைஃப் (Yellowknife) நகரிலிருந்து 17 கிலோ மீற்றர் தொலையில் கடந்த புதன்கிழமை காட்டுத் தீவு பரவியதால் இன்று வெள்ளிக்கிழமை மதியம் அந்நகரில் வசிக்கும் 20,000 குடியிருபாளர்களையும் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்நகரிலிருந்து வெளியேறுவதற்கு ஒரே ஒரு நெடுஞ்சாலை தெற்கே மட்டும் உள்ளது. மக்கள் வெளியேறுவதற்கு வணிக மற்றும் இராணுவ விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

யெல்லோநைஃப்பின் மேற்கில் எரியும் தீ, இப்போது நகரத்திற்கு உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடமேற்கு பிரதேசங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷேன் தாம்சன் ஒரு செய்தி சந்திப்பில் கூறினார்.

யெல்லோநைஃப் நகரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது கனடாவில் காட்டுத்தீயின் பயங்கரமான கோடைகாலத்தின் புதிய அத்தியாயமாகும். ஏனெனில் தீப்பிழம்புகள் நாடு முழுவதும் விரைவாக பரவி, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது. கனடாவில் பரந்து விரிந்த நாடு முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட காட்டுத் தீ எரிகிறது என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.