பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கத்துக்குட்டி அணி!

0
39
Article Top Ad

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரண்டாவது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் துடுப்பெடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 15.4 ஓவர்களிலேயே 144 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் கேப்டன் முகமது வசீம் சிறப்பாக விளையாடி 55 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

வெற்றி கோப்பையை தீர்மானிக்கும் 3வது மற்றும் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.