உலகக் கிண்ண செஸ் போட்டியில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கார்ல்சென்

0
90
Article Top Ad

உலகக் கிண்ண செஸ் போட்டிக்கான இறுதிச்சுற்றில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் வெற்றிபெற்றார்.

அஜர்பைஜானில் நடைபெற்ற உலக கிண்ண செஸ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீரரான பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் செஸ் விளையாட்டின் சிறந்த செஸ் வீரக்ளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில உள்ள அமெரிக்கா வீரரான ஃபேபியானோ கருவானாவை (Fabiano Caruana) 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன.

இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் மேக்னஸ் கார்ல்சன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும் மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அதனை தொடர்ந்து முதல் சுற்றில் வெற்றிபெற்ற மேக்னஸ் கார்ல்சன் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது இடத்தை இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா பெற்றார்