டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதா இலங்கை விமானம்?

0
39
Article Top Ad

கொழும்பில் இருந்து இந்தியாவுக்கு சென்ற U.L 195 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

U.L 195 விமானத்தில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், விமானம் அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளில் ஒன்றில் ஒரு சிறிய சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறியுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், அவ்வப்போது இதுபோன்ற விடயங்கள் நடப்பதாகவும், விமானக் குழுவினர் அவற்றைக் கையாள முழுப் பயிற்சியை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

“ஒரு ஹைட்ராலிக் அமைப்பில் பாதிப்புகள் ஏற்படுவதால் அது விமானத்தின் செயல்திறனைப் பாதிக்காது அல்லது விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டியதற்கான தேவையை உருவாக்காது.

விமானத்தின் தரையிறக்கம் பாதுகாப்பாகவும் எந்த அசம்பாவிதமும் இன்றி மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல், விமானத்தில் இருந்து பாதுகாப்பாகவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவும் வெளியேறினர்”என்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதாகவும் விமானிகள் விமானத்தில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்பவர்களாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இந்தியாவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று நேற்று புதன்கிழமை மாலை அவசரமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.