போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டு தலங்களை அமைப்பதை உடன் நிறுத்துங்கள்!

0
36
Article Top Ad

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் போது ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்தே முடிவெடிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை-நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரை இன முறுகல்களை ஏற்படுத்தும் தெரிவித்து விகாரையின் நிர்மாணப்பணிகள் மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில்,ஆளுநரின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

இவ்விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்து தமிழர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் கருத்து மோதல்களும் இடம்பெற்றுவந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையிலேயே, “போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுனர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.