பரம எதிரிகள் மோதிய ஆட்டம்; மழையால் கைவிடப்பட்டது

0
72
Article Top Ad

இந்தியா மற்றும் பாகிஸ்தானி அணிளுக்கு இடையிலான ஒரு போட்டி மழை காரணமாக முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ணப் போட்டிகளில் இன்றை ஆட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் மழை குறுக்கிட்டதான் காரணமாக இந்த போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அணி ஏ குழுவில் மூன்று புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறிய இந்தியா; 266 ஓட்டங்களுக்குள் சுருண்டது
ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 266 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறும் இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

போட்டியில் இடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டிருந்தது.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சிக்கும் முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியிருந்தனர்.

ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பெரும் தடுமாற்றங்களை எதிர்நோக்கியிருந்தனர். மிகக் குறைந்த ஓட்டங்களுக்குள் அவர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியிருந்தனர்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தனர்.

66 ஓட்டங்களுக்குள் இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்து தடுமாறியிருந்தனர்.

எனினும், இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் நிதானமான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி கெளரவமான ஓட்ட இலக்கை அடைந்தது.

இஷான் கிஷன் 82 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹீன் ஷா அப்ரிடி நான்கு விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்