இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் திடீரென ஒத்திவைப்பு

0
33
Article Top Ad

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீரென் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“செப்டெம்பர் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம் செய்யவிருந்த நிலையில், இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரின் இலங்கை விஜயத்திற்கான புதிய திகதிகள் பின்னர் தீர்மானிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்காக ராஜ்நாத் சிங் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் இதன் போது இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளின் குறித்து ஆராயவிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் நட்புறவை ஆழப்படுத்துவதில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணம் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.