ராஜபக்ஸக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஈஸ்டர் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதா? சந்தேகத்தை மீண்டும் வலுப்படுத்தும் சனல் 4 ஆவணக்காணொளி

0
83
Article Top Ad

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் மூன்று தேவாலயங்களிலும் இரண்டு ஹோட்டல்களிலும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 300 பேர் வரையில் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்தும் இருந்தனர்.

இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற சினதினங்களிலேயே இவை ராஜபக்ஸக்களை மீண்டும் அதிகார பீடமேற்றுவதற்காக திட்டமிடப்பட்டவை என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்புக்களிலும் வெளிப்படுத்தப்பட்டன.இந்தச் சந்தேகங்களை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக சனல் 4 இன்று வெளியிட்டுள்ள ஆவணக்காணொளி அமைந்துள்ளது.

https://www.channel4.com/news/sri-lanka-bombings-were-269-people-killed-for-political-power-dispatches-exclusive

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளராக இருந்தவரும் அக்கட்சியின் தலைவர் பிள்ளையானின் நெருங்கிய சகாவான அஸாட் மௌலானா உட்பட சிலரின் நேரடி வாக்குமூலங்களை அடிப்படையாகக்கொண்டு சனல் 4 தயாரித்துள்ள ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆவணக்காணொளியில் ராஜபக்ஸக்களை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக இலங்கையில் ஒருவித நிச்சயமற்ற பீதி நிலையை உருவாக்குதவதற்காக ராஜபக்ஸக்களுக்கு நெருக்கமான புலனாய்வுத்துறையினர் மற்றும் இதர தரப்பினருடன் இணைந்து திட்டமிடப்பட்ட சதியே ஈஸ்டர் தாக்குதல்கள் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.