மொரோக்கோவில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு

0
97
Article Top Ad

மொரோக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான அதி பயங்கர நிலநடுக்கத்தில் 820 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடஆபிரிக்க நாடான மொரோக்கோவின் ‘ஹை அட்லஸ்’ மலைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இப்பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது, மாரகேஷ் (Marrakesh) பகுதியின் தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அட்லஸ் மலைகளில் (Atlas Mountains) அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மொரோக்கோவின் உள்துறை அமைச்சு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேச அளவிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமான மேரகேஷ் நகரில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் கோபுரம் ஒன்று இடிந்து விழுந்ததில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதைத் தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காட்டுகின்றன.