தேர்தல்முறையை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

0
43
Article Top Ad

தேர்தல்முறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூட்டாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் மறுசீரமைப்பு குறித்து ஆராய்ந்து சிபாரிசுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இத்தகைய ஓர் ஆணைக்குழுவின் நியமனம் குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்துகிறோம் என சட்டத்தரணிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு ரீதியில் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை தாமதப்படுத்துவதற்கு இந்த ஆணைக்குழுவை சாக்குப்போக்காக பயன்படுத்த வேண்டாம் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக தேர்தல்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் மேலும் தலையிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ரியென்சி அர்செகுலரத்ன (ஜனாதிபதி சட்டத்தரணி)

பேராசிரியர் சாவித்திரி குணசேகர

உபுல் ஜயசூரிய (ஜனாதிபதி சட்டத்தரணி)

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன (ஜனாதிபதி சட்டத்தரணி)

ஜெஃப்ரி அழகரத்தினம் (ஜனாதிபதி சட்டத்தரணி)

டினால் பிலிப்ஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி)

அனுர மெத்தேகொட (ஜனாதிபதி சட்டத்தரணி)

சாலிய பீரிஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி)

எம்.எம். சுஹைர் (ஜனாதிபதி சட்டத்தரணி)

உபுல் குமரப்பெரும (சட்டத்தரணி)

கே.டபிள்யூ. ஜனரஞ்சன (சட்டத்தரணி)

ஸ்ரீநாத் பெரேரா (சட்டத்தரணி)

எர்மிசா டெகல் (சட்டத்தரணி)

மனோஜ் நாணயக்கார (சட்டத்தரணி)

ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடித்தில் கையெழுத்திட்டுள்ளனர்.