‘லியோ வெற்றி’ – தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்தார் விஜய்

0
28
Article Top Ad

தமிழ் சினிமாவின் நம்பர் வன் நடிகர் என்ற யார் என்ற வாதம் கடந்தசில காலமாக பேசுபொருளாக இருந்து வருகிறது.

அதில் அதிகமான போட்டி ரஜினி மற்றும் விஜய்க்கு இடையில் நிலவி வருகிறது.

அண்மையில் வெளியாகியிருந்த ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் 600 கோடிகள் வரை வசூலித்து தமிழ் சினிமாவில் ஒரு சாதனைப் படைத்த திரைபடமாக உருவானது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ரிலீஸ் ஆன லியோ படத்திற்கு அனைத்து பக்கங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்துகொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களும் படத்தை பெரிய அளவில் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலை காட்சிகள் இல்லை என்றாலும் முதல் நாளில் லியோ படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

லியோ படத்தை தயாரித்து இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தற்போது லியோ படத்தின் முதல் வசூல் நிலவரத்தை அறிவித்துள்ளது.

முதல் நாளில் மாத்திரம் உலக அளவில் 148 கோடிவரை இந்த படம் வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் மாத்திரமல்ல இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இது உள்ளது. வரும் நாட்களில் இந்த படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உருவாகுமென சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

படம் ப்ளாக்பஸ்டர் என அறிவித்து இருக்கின்றனர். இதனை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிவை வசூல் ரீதியாக விஜய் முந்தியுள்ளதால் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்பதை ரசிகர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.