சம்பந்தனின் கதிரையை குறிவைக்கும் சுமந்திரன்

0
61
Article Top Ad

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கதிரைக்கு இலக்கு வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சம்பந்தனை விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கோருகிறார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சம்பந்தனை பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரீகமான அரசியல் பண்பு அல்ல.

சம்பந்தன் வயோதிபம் காரணமாக பாராளுமன்ற உறுப்பினராக பணியை மேற்கொள்ள முடியாதவராகவோ இருப்பாராயின், அவருக்கு பதிலாக புதிய ஒருவருக்கு வாய்ப்பு வழங்குவதென்பது அந்த கட்சியின் உள்விவகாரம்.

ஒவ்வொரு கட்சியும் தங்களின் அரசியல் கொள்கை நிலை, கட்சி யாப்பு விதிமுறை, ஒழுக்கக் கட்டப்பாடுகள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியே செயற்படும்.

இதன்பிரகாரம் கட்சியின் உள்விவகாரங்கள் கட்சிக்குள்ளேயே பேசி தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவே ஜனநாயக மரபு.

ஆனால், கட்சியின் உள்விவகாரங்களை ஊடகங்கள் முன்னிலையில் பொதுவெளியில் பகிரங்கமாக வெளிக்கொண்டு வருவதென்பது என்ன நோக்கத்தின் அடிப்படையிலாதென தெளிவாக புலப்படுகின்றது.”- என்றார்.