நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் பரிசாக வெளியான இந்தியன் 2 காட்சிகள் ; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
65
Article Top Ad

‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காணொளியை தமிழில் நடிகர் ரஜினிகாந்த் வௌியிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், 25 வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நவம்பர் 7ம் திகதி உலகநாயகனின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காணொளியை தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தும், ‘இந்தியன் 2’ படத்தின் தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலியும், இந்தியில் நடிகர் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன் லாலும் வெளியிட்டுள்ளனர்.

இந்தியன் 2 முன்னோட்ட காணொளியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.