அமைச்சரவைக்குள் கறுப்பாடுகள்

0
78
Article Top Ad

சீனி இறக்குமதி மீதான வரி அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படுவதற்கு முன்னர் வெளியாருக்கு தகவல்கள் கசியவிட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வரி திருத்தம் குறித்து இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு மாத்திரமே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“சீனி மோசடி தொடர்பாக நாங்கள் அன்றும் குரல் எழுப்பினோம். இன்றும் மோசடி நடந்தால் தொடர்ந்து குரல் எழுப்புவோம். மோசடி அல்லது தவறு நடந்தால் வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டோம். இங்கு என்ன நடக்கிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

வரி அதிகரிப்பு முடிவு குறித்த தகவல் வணிகர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. உண்மையைச் சொல்வதென்றால், வரியை அதிகரிக்கும் முடிவை அமைச்சரவை உறுப்பினர்கள் கூட அறிந்திருக்கவில்லை.

அரசு வரி விதிக்க முடிவு செய்த பின்னர் குறித்த பொருளை சில வணிகர்கள் இறக்குமதி செய்கிறார்கள். அரசாங்கம் வரியை குறைக்க முடிவு செய்யும் போது, அதே குழு குறிப்பிட்ட பொருட்களை மறைக்கிறது.

வரி திருத்தம் தொடர்பிலான முடிவுகள் தொழிலதிபர்களுக்கு எப்படிச் செல்கிறது? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது.“ என்றும் அவர் கூறினார்.