இலங்கையில் 14,225 கட்டடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
70
Article Top Ad

நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டடங்கள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியல் புவியியலாளர் லக்சிறி இந்திரஜித் தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் உள்ளதான இனங்காணப்பட்டுள்ள சுமார் 5000 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர்வரை வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாத்தறை, கண்டி, நுவரெலியா, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்சரிவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான 1685 வீடுகளின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.