கொங்கோவில் இருந்து வெளியேறிய கிழக்கு ஆபிரிக்க படை

0
31
Article Top Ad

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையானது கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படை தொடர்ந்து கொங்கோவில் இருப்பது பயனற்றது என Kinshasa கருதிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

M23 கிளர்ச்சிக் குழுவின் மீள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதன்முதலில் கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் நிறுத்தப்பட்டனர்.

அத்துடன், கிளர்ச்சியாளர்களினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை விடுவிப்பதற்கு கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் அழைக்கப்பட்டனர்.

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையினர் அழைக்கப்பட்டதில் இருந்து M23 கிளர்ச்சிக் குழுவை மீளப்பெறாத தவறியுள்ளதாக கொங்கோ ஜனாதிபதி Felix Tshisekedi விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தொடர்ந்து கிழக்கு ஆபிரிக்க சமூக உச்சிமாநாட்டிற்குப் பின்னர் குறித்த ஆணையை புதுப்பிக்கப் போவதில்லை என கொங்கோ ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படை மற்றும் கொங்கோ அரசாங்கத்துக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த 8 ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில், படையினர் வெளியேறி வருகின்றனர்.

கொன்கோவின் Goma நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து இரண்டு விமானங்கள் ஊடாக படையினர் வெளியேறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.