யாழ். குடாநாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்; பறவைகளுக்கும் ஆபத்து

0
24
Article Top Ad

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 11 மில்லியன் டொலர் மானியத்தை வழங்கியுள்ளது.

யாழ்.குடாநாட்டின் டெல்ஃப், நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கம் இந்த மானியத்தை வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம், கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஏலங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டம் யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளுக்கும், பருவக்காலத்துக்கு புலம் பெயர்ந்துவரும் பறவைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (CCIY) தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குனர் வி.கே.விக்னேஷ் கூறியதாவது,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். ஆனால், அவர்கள் அடையாளம் கண்டுள்ள பகுதிகள் குறித்து சில கவலைகள் உள்ளன. இது புலம் பெயர்ந்துவரும் பருவக்கால பறவைகளின் வருகையை சீர்குலைக்கும் திட்டத்தின் துவக்கமாக இருக்கும். ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கும் இதுதான் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம். இவர்கள் அடையாளம் கண்டுள்ள பல இடங்கள் சுற்றுலா மையங்களாகும்.

பூநகரி பகுதியிலிருந்து புத்தளம் பகுதி வரை அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளன.

எனவே, இந்த புதுபிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் காற்றாலைகள் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்றால், அந்த அழகிய நிலப்பரப்புகளை விளம்பரப்படுத்துவது மிகவும் கடினம்.

கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டமாகவும் தேவையாகவும் கருதுகின்றனர். இது இன்றியமையாத ஒன்றாகும். அதனால் அவர்கள் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும்.

மேலும், காற்றாலைகள் இந்த கிராமங்களின் முழு அமைப்பையும் பாதிக்கும் என்பதால் கிராம மக்களும் திட்டத்தால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. நாடு பாரிய மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் நாட்டிற்கு நிலையான எரிசக்தியை வழங்க முடியும்.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது பங்களிப்பு இதன் மூலம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். குறைந்தபட்சம், கடலோரப் பகுதிகளைச் சுற்றியுள்ள பரந்த வளங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.