சஜித்துடன் இணைந்த சு.கவின் உப தலைவர்

0
32
Article Top Ad

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ஷான் விஜயலால் டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பலாங்கொட பிரதான அமைப்பாளராக இவர் இருந்தார்.

தென் மாகாண முதலமைச்சராகவும் மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

ஷான் விஜயலால் டி சில்வா இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை தொகுதிக்கான பிரதம அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது.