சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றியீட்டி மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேய்க் ஹஸீனா

0
105
Article Top Ad

பங்களாதேஷில் பஞாயிற்றுக்கிழமையன்று சர்ச்சைக்குரிய பொதுத்தேர்தலில் நடப்பு பிரதமர் ஷேய்க் ஹஸீனா மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

இதன் மூலம் 4வது தடவையாக அவர் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி அமைக்கின்றார்.தெற்காசியாவில் மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சிகண்டுவரும் நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் விளங்குகின்றது.

அங்கு பிரதமராக ஷேக் ஹஸீனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. எனினும் தேர்தலுக்கு முன்பாக பொதுவான ஒரு அரசை நிறுவி தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஷேக் ஹஸீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனால் வங்கதேசத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்து இருந்தன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்ததால் ஷேக் ஹஸீனா எளிதில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் இன்று ஓட்டு செலுத்தினர்.

இந்த தேர்தலில் பதிவான உடனடியாக எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் 27 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 436 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டு இருந்தனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 264 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வென்றுள்ளது. கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹாசனும் தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.