நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி -அவசரமாக தடையிறக்கப்பட்ட அமெரிக்க விமானங்கள் !

0
34
Article Top Ad

அமெரிக்காவின் அலாஸ்கா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நடுவானில் சேதத்திற்குள்ளானதையடுத்து 171 விமானங்களை உடனடியாக தரையிறக்க அமெரிக்க விமான நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.


அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் ஒரு பகுதி உடைந்து ஆயிரக்கணக்கான அடிகள் காற்றில் பறந்தது.

அமெரிக்கன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி சென்று கொண்டிருந்தது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் உட்பட வெளிப்புறப் பகுதி உடைந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் அதன் 65 போயிங் 737 மேக்ஸ் 9 விமானங்களையும் ‘தற்காலிகமாக’ தரையிறக்கியுள்ளது.

https://x.com/shoaibpage/status/1743773536525681014?s=20

அலாஸ்கா ஏர்லைன்ஸ் இந்த விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

விமானப் பணியாளர்கள் காற்றழுத்தப் பிரச்னை குறித்துப் புகாரளித்ததை அடுத்து விமானம் பத்திரமாகத் திரும்பியதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தில் 177 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனம் இந்தச் சம்பவம் குறித்து நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும்இ இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும்இ நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு எந்த விசாரணைக்கும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஃப்ளைட்வேர் Flightwear மற்றும் ஃப்ளைட்ராடார் Flightradar 24  என்ற விமான கண்காணிப்பு இணையதளங்களின்படி அந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 9 ஆகும்.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாகவும் விமானம் போர்ட்லேண்டில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம் ‘இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது. இருப்பினும் எங்கள் விமானக் குழுவினர் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர் என்பதுடன் நிலைமையை பாதுகாப்பாக கையாள தயாராக உள்ளனர்’ எனத்தெரிவித்துள்ளது.

விமான கண்காணிப்புத் துறையின் தரவுகளின்படி விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தபோது 16,000 அடி (4,876 மீ) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது என்று தெரியவந்துள்ளது.