பிரான்சின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் நியமனம்

0
46
Article Top Ad

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார். இதன் மூலம் 34 வயதான அவர் பிரான்சின் இளைய பிரதமர் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளார்.

எலிசபெத் போர்ன் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அந்தப் பதவிக்கு கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.

எலிசபெத் போர்ன் இரண்டு வருடங்களுக்கும் குறைவான பதவியில் இருந்ததுடன், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக தனது பதவியை இராஜினாமா செய்தார்.

“பிரான்ஸ் குடியரசின் ஜனாதிபதி கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்தார், மேலும் அவருக்கு அரசாங்கத்தை அமைக்கும் பணியை வழங்கினார்” என்று ஜனாதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கேப்ரியல் அட்டலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யார் இந்த கேப்ரியல் அட்டல்?

கோவிட் தொற்றின் போது அரசாங்க செய்தித் தொடர்பாளராக இருந்த கேப்ரியல் அட்டல் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், வானொலி நிகழ்ச்சிகளிலும் பாராளுமன்றத்திலும் எளிதான ஒரு அறிவார்ந்த அமைச்சராக பெயர் எடுத்தார்.