ஊழல் குற்றச்சாட்டு; பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்

0
27
Article Top Ad

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பிரான அவர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அதுவரை அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பெற்றுக்கொண்ட சம்பளத்தையும் அவர் திருப்பி செலுத்தியுள்ளார்.

சிங்கபூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று (18) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஜூலை 11ஆம் திகதியில் அமைச்சர் ஈஸ்வரன் விடுமுறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்காலிக போக்குவரத்து அமைச்சரான சீ ஹொங் டாட், ஈஸ்வரனுக்குப் பதில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் என சிங்கப்பூர் பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் இன்று (18) காலை அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 27 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.