நியூஹம்ஸயரிலும் வெற்றி : குடியரசுக்கட்சியின் வேட்புரிமையை நெருங்கிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்

0
40
Article Top Ad

2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய நியு ஹம்ஸயர் மாநிலத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று தடம் பதித்துள்ளார்.

கடந்த வாரம் அயோவா மாநிலத்தில் வெற்றி பெற்ற ட்ரம்ப் தற்போது நியுஹம்ஸயரில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் குடியரசுக்கட்சியின் வேட்புரிமையைப் பெறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புக்கள் தடுக்காது விடின் அவர் நிச்சயம் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது திண்ணம்

அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு  மாநிலங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.