சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு: கடவுச் சீட்டும் கையளிப்பு

0
205
Article Top Ad

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழங்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவினை பிறப்பிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் தாயகத்தில் உள்ள தமது தாயாரை பார்ப்பதற்கு இலங்கை செல்ல அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது.

இதன் போது சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணைத்தூதரகம் அனுப்பியுள்ள நிலையில், அதனை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆவணம் கிடைக்கப் பெற்ற பின்னர் இலங்கைக்கு சாந்தனை அனுப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.