கருக்கலைப்பு பிரான்ஸில் அரசியலமைப்பு ரீதியான உரிமை: செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது யோசனை

0
24
Article Top Ad

கருக்கலைப்பு அரசியலமைப்பு ரீதியான உரிமை என்பதை உறுதிப்படுத்தும் யோசனைக்கு பிரான்ஸ் செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனையானது செனட் சபையில் ஐந்தில்,மூன்று என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதால், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனட் சபை யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள பின்னர், அடுத்த வாரம் பாராளுமன்றத்தின் ஒருங்கிணைந்த கூட்டத் தொடரில் கருக்கலைப்பை அரசியலமைப்பு ரீதியான உரிமையாக அங்கீகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

கருக்கலைக்கும் உரிமை,அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்,அதற்கு முழுமையான அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு அவசியம் என பிரான்ஸ் அரசாங்கம், சட்டவாக்க நிபுணர்கள் மற்றும் செனட் சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

யோசனைக்கு ஆதரவாக 267 வாக்குகள் கிடைத்திருந்ததுடன் எதிராக 50 வாக்குகள் அளிக்கப்பட்டன.

1974 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு என்பது பிரான்ஸில் சட்டரீதியானது என்ற போதிலும் அதனை அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்துவதற்கான இந்த யோசனை கொண்டு வரப்பட்டது.

உலகில் பெண்களின் உரிமைகளுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், பிரான்ஸ் அதற்கான குரல் கொடுத்து, முன்னேற்றமான வழிக்குள் பிரவேசித்துள்ளதாக செனட் சபையில் நடந்த நீண்ட விவாதங்களுக்கு பின்னர், உரையாற்றிய பிரதமர் கேப்ரியேல் ஹெடல் தெரிவித்துள்ளார்.

கருவை கலைக்க தீர்மானிக்கும் பெண் ஒருவரின் அந்த சுதந்திரத்தை பின்நோக்கி திருப்ப முடியாத படி மாற்றுவதாக தான் வாக்குறுதி வழங்கியிருந்தாக ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.