இலங்கையில் அணு மின் நிலையங்களை அமைக்க ஆறு நாடுகள் போட்டி

0
61
Article Top Ad

இலங்கையில் அணுமின் நிலையங்களை (nuclear power plants) அமைப்பதற்கான ஆறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“இலங்கையில் அணுசக்தியின் சாத்தியமும் அதன் சவால்களும்“ என்ற தலைப்பில் இலங்கை பொறியாளர்கள் நிறுவனம் (IESL) அண்மையில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய இலங்கை அணுசக்தி திணைக்களத்தின் (SLAEB) தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா,

ரஷ்யாவின் Rosatom, சீனாவின் தேசிய அணுசக்தி நிறுவனம் (CNNC), பிரான்சின் Électricité de France (EDF), மற்றும் டென்மார்க்கின் Seaborg ஆகிய நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

Ultra Safe Nuclear Corporation of the US (USNC) மற்றும் Canada’s Atomic Energy of Canada Ltd (AECL) ஆகிய நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் முன்மொழிவு மிகவும் விரிவானது. பங்களாதேஷில் இரண்டு அணுமின் நிலையங்களையும், கல்பிட்டியில் இருந்து 207 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூடங்குளத்தில் ஒரு அணுமின் நிலையத்தையும் ரஷ்யா கட்டுகிறது.

ரஷ்யர்களும் எமது பிராந்திய முயற்சிகளில் சேர வேண்டும் என நினைக்கிறோம்.

Rosatom அதிகாரிகளுடன் நாங்கள் பல விவாதங்களை நடத்தி, முன்மொழிவுகளை இறுதி செய்துள்ளோம். இதை இறுதி செய்ய, நாம் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களில் (IGAs) கையெழுத்திட வேண்டும்.

நாங்கள் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன்னர் பிரேரணையை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பினோம். ஆனால், இன்னும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை.

இது ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஐ.எம்.எப். செயல்பாடுகள் காரணமாக தமதமாகலாம். ”என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு சீனாவிடமிருந்து ஒரு முழுமையான முன்மொழிவு கிடைத்துள்ளதுடன், CNNC இன் பிரதிநிதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்தனர்.

டென்மார்க்கிலிருந்து எங்களுக்கு ஒரு தனித்துவமான முன்மொழிவு கிடைத்துள்ளது. அவர்கள் மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.