ஆசியாவில் அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடு இலங்கை

0
20
Article Top Ad

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீரிழிவு நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சனத்தொகை விகிதத்தின்படி ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

”இந்நாட்டு மக்கள் அதிகளவு சீனியை பயன்படுத்துவதற்கான தூண்டுதலே இதற்குக் காரணம்.

மக்கள் பால் மாவை பயன்படுத்துவதைக் குறைத்தால் நீரிழிவு நோய் உட்பட பல நோய்கள் குறையும்.” எனவும் ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நான்கு பேரில் ஒருவருக்கு, அதாவது 23% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில், அந்த எண்ணிக்கை 31% ஆக அதிகரித்துள்ளது. அதாவது மூன்று பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோய் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.